இலங்கையின் புதிய வீதி வரைபடம் வெளியானது!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இலங்கை மதிப்பீட்டு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வீதிகளும் அதிவேக வீதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்பு போட்சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், காவல்துறை நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை முன்னைய வரைப்படத்தில் இருக்கவில்லை.

மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பி.சங்கக்கார இது தொடர்பில் கூறுகையில் இந்த புதிய வரைபடம் கூகுள் வரைபடத்துக்குள்ளும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.