கொடுப்பனவுகள் செலுத்தாத வாகனங்களின் டயர்களை பூட்டி வைப்பதற்கு கொழும்பு மாநகரசபை தீர்மானம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஞாபகமூட்டல்களுக்கு பின்னரும் கொடுப்பனவுகளை செலுத்தாத வாகனங்களின் டயர்களை பூட்டி வைப்பதற்கு கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.

மாநகரசபையின் பொறியியலாளர் மஞ்சுள குலரட்ன இதனை தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் வாகன தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண சேகரிப்பு முறை மாநகர சபையின் சில பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.

இதன்படி கட்டணங்களை செலுத்தாத வாகன சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்போது கட்டணங்களை செலுத்தாத வாகனங்களின் டயர்கள் பூட்டிவைக்கப்படும் என்றும் குலரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கட்டணங்களை செலுத்திய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்