மன்னாரில் இடம் பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி

Report Print Ashik in சமூகம்

மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாக கொண்ட அமரர் சன்முகம் அமிர்தலிங்கத்தின் 2வது ஆண்டு நினைவை ஒட்டி வடக்கின் பாரம்பரிய நிகழ்வான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று மாலை 3 மணியளவில் மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரனையுடன் இடம் பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகளுடன் போட்டி இடம் பெற்றுள்ளது.

குறித்த மாட்டு வண்டி சவாரியானது A,B,C,D ஆகிய நான்கு பிரிவுகளாக இடம் பெற்றது. குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசில்கள் ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.