தலைமைத்துவ பண்புகளோடு மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும் : சிறீதரன் எம்.பி

Report Print Arivakam in சமூகம்

தலைமைத்துவ பண்புகளுடன் எமது இளைஞர்களும் மாணவர்களும் வளர்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்தெரிவித்துள்ளார்.

பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்கள் சுயநலத்திற்காக கல்வி கற்கக்கூடாது. உங்களை நம்பித்தான் இந்த தேசமும் இனமும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் கல்வியை கற்பதுடன் விளையாட்டிலும் அதே உணர்வுடன் ஈடுபடுவீர்கள் ஆயின் நீங்கள் இந்த பூமிப்பந்திலே வெற்றி பெற்ற மனிதர்களாக மாறுவீர்கள்.

எங்கள் இனத்திற்கும் தேசத்திற்கும் தலைமைத்துவத்தை வழங்கமுடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கல்வியைத் தொடருங்கள் எனவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை தலைமைத்துவ பண்புள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.