இலங்கையிலுள்ள சீன நாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையில் தொழில் புரிந்துவரும் சீன நாட்டவர்களுக்கு அரசாங்கம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதவிர, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொழில் புரிந்துவரும் சீன நாட்டவர்கள் தொழில் புரியும் மற்றும் தங்கும் இடங்களை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பையும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 13781 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers