மாவனல்லையில் புத்தர்சிலை உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணையில் சந்தேகம்

Report Print Ajith Ajith in சமூகம்

2018ஆம் ஆண்டு மாவனல்லையில் புத்தர்சிலை உடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின்போது, அரசியல் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்று தாம் சந்தேகப்படுவதாக கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

விசாரணையின்போது, அதன் தகவல்கள் வெளியிடங்களுக்கு அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டமையை தாம் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாவனல்ல பொலிஸாருடன் தொடர்புகொண்டு இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பெறமுயற்சிக்கையில் தாம் பொலிஸாரிடம் அந்த உரையாடல் தொடர்பை துண்டிக்கக் கூறியதாகவும் பொலிஸ் அதிகாரி சாட்சியமளித்தார்.

முன்னதாக இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, அசாத் சாலி மாவனல்ல புத்தர் சிலை உடைப்பு சந்தேகநபர்களின் விசாரணை தொடர்பில் தகவல்களை அறிந்துக்கொள்ள முயற்சித்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers