தொழில்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓர் அறிவித்தல்

Report Print Ajith Ajith in சமூகம்

2017ஆம் ஆண்டுக்கு பின்னர் தொழில்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதற்கான யோசனையை முன்னைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்திருந்தது.

எனினும் இதனை அதிகரித்தால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 130 பில்லியன் ரூபாய்கள் அதிக செலவு ஏற்படும் என்று தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்தவர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்காமல் அவர்கள் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பெற்ற சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியத்தை மீளமைப்பு செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் யோசனைப்படி, ஆகக் குறைந்தது 3000 ரூபாவை பெற்று வந்த 2017இற்கு பின்னர் ஓய்வுப்பெற்றவர்கள் 10,000 ரூபாய் வரை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது.

இதன்படி ஒரு இலட்சம் பணியாளர்கள் நன்மைப்பெற இருந்தனர்.

எனினும், முன்னைய அரசாங்கத்தின் இந்த திட்டம் பாரிய சம்பள முரண்பாட்டை ஏற்படுத்திவிடும் என்றும் திறைசேரியின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு வருடம் ஒன்றுக்கு 270 பில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...