பேலியகொடை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - கண்டி வீதியின் பேலியகொடை துட்டகெமுனு மாவத்தை பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பின்னால் வந்த முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...