மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கையா?

Report Print Steephen Steephen in சமூகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என சிறைச்சாலையின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுதினம் சுதந்திர தினத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை சிறைச்சாலைகள் திணைக்களம் தயாரித்துள்ளதுடன் அந்த பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் இல்லை என அந்த தகவல்கள் கூறுகின்றன.

சுதந்திர தினத்தன்று சிறிய குற்றங்களை செய்து தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கே பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அது நீண்டகால செயற்பாடு எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா அந்த தண்டனை நிறைவேற்றப்படும் வரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள், போதி பூசைகள் என்பன கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் தண்டனை பெற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...