இரண்டு மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தமது இரண்டு புதல்விகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நாவலப்பிட்டிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் தொலோஸ்பாகே பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் தனது 29 வயதான ஒரு பிள்ளை தாய் மற்றும் 24 வயதான புதல்விகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தந்திரமான முறையில் ஒரு நபரை பயன்படுத்தி மூன்று பேரையும் சிக்க வைத்துள்ளனர்.

24 வயதான மகள் கர்ப்பமாகியுள்ளதாகவும் குடும்பத்தின் பொருளாதார வறுமை காரணமாக இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Latest Offers

loading...