கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் உயிரிழப்பு குறித்து அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
#

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பு குறித்து உலக சுகாதார மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸில் இந்த உயிரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பிலிப்பைன்க்கு சென்ற 44 வயதானவரே பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சீனாவில் வுஹான் உட்பட்ட ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தோர் எண்ணிக்கை 304 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இன்னும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தநிலையிலேயே பிலிப்பைன்ஸிலும் இந்த தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...