வவுனியாவை வந்தடைந்தது மாற்றுத்திறனாளிகளின் சக்கரநாற்காலி பயணம்

Report Print Theesan in சமூகம்

மாற்றுத்திறனாளிகளினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் இன்றையதினம் வவுனியாவை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று காலை 08.30 மணியளவில் இந்த பயணம் ஆரம்பமாகியுள்ளது.

இப் பயணம் ம.மொகமட் அலி, ஜெகதீஸ்வரன், பிறேமசந்ர ஆகிய மாற்றுத்திறனாளிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், மும் மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை முழுதுமான இப் பயணம் சுதந்திரதினம் அன்று கொழும்பை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers