பிரித்தானியாவில் உயிரிழந்த திக்சிகாவிற்கு வவுனியாவில் அஞ்சலி

Report Print Theesan in சமூகம்

உடல்நலகுறைவால் உயிரிழந்த தமிழர் இளையோர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான முக்கியஸ்தர் திக்சிகா சிறிபாலகிருஸ்ணனிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த 1078 நாட்களாக சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் குறித்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

பிக்குகளினால், யாழில் ஏற்படுத்தப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் யாவும் போலியானதும், சர்வதேச ஈடுபட்டை தடுப்பதற்குமாகவே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை முன்னர் சுமந்திரன் சர்வதேசத்திடமிருந்து பாதுகாத்தார் என்பது போலவே இதுவும்.

யாழில் நடக்கும் இந்து - புத்த மத மாநாடு, இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துவதாக ஒரு வதந்தி உள்ளது. ஆனால் இருவரும் தமிழர்கள். எம்மிருவருக்கும் பூர்வீக வரலாறு திடமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வந்த பிக்குகள், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளிக்கின்றனர். 2009இல் ராஜபக்ச 150,000 தமிழர்களைக் கொன்றபோது அவர்கள் எங்கே இருந்தார்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.