தமிழர்களின் கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெப்ரவரி 4 கரிநாள். இலங்கையின் சுதந்திர தினம். அது தமிழர்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும், கிழக்கிலும் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி இடம்பெற உள்ளது.

இதற்கான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான பணிப்பாளர்கள் விபரம் பின்வருமாறு,

வடக்கு மாகாணம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து காலை 10.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகி பளைய பஸ்ராண்ட் வீதியைச் சென்றடையும்.

அந்தவகையில், யாழ்.மாவட்ட போக்குவரத்து சேவைக்கு சுகந்தினி நியமிக்கப்பட்டுள்ளார்.தொ.இ. 077821 8775. வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அருள்மதி நியமிக்கப்பட்டுள்ளார் தொ.இ.076652 4715. பூனகரி வலைப்பாடு கிராஞ்சி நாச்சிக்குடா போக்குவரத்து சேவைக்கு கமலா நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 0760436388.

கிளிநொச்சி மாவட்ட போராட்ட ஏற்பாட்டாளராக கருணாவதி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ.0774279987. கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவைகள் கிருஸ்ணபுரம் உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு செல்வாநகர் ஊடாக கனகபுரம் தெரு வழியாக டிப்போ சந்தி போய் பழைய கச்சேரியடி வழியாக கந்தசாமி கோயில் வரைக்கான ஒருங்கிணைப்பாளராக ஆர்.இராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 0773749618.

ஜெயந்தி நகர் கனகபுரம் கணேஷபுரம் திருநகர் ஊடாக புதிய கச்சேரி வழியாக ஏ9 வீதி ஊடாக கந்தசுவாமி கோயில் வரை அ,நாகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 0762189192.

வவுனியா திருக்குமரன் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ.076 807 8615. மன்னார் மாவட்டம். றஞ்சினி தொ.இ.0772638399.

புதுக்குடியிருப்பு சிவன் கோயிலுக்கு மதி நியமிக்கப்பட்டுள்ளார் தொ.இ. 077212 3604. வள்ளிபுனம் கைவேலி தேவிபுரம் பிருந்தா நியமிக்கப்பட்டுள்ளார் தொ.இ. 0767355206.

கொக்குளாய் வலைஞர்மடம் மாத்தளன் மையில் குஞ்சன் குடியிருப்பு உதயராணி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 077860 4511.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் தயாழினி நியமிக்கப்பட்டுள்ளார். தொ இ 077921 9368.

கிழக்கு மாகணம் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எழுச்சி பேரணி காலை 10.00 மணிக்கு மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும்.

இம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான போக்குவரத்து சேவைகள் பின்வருமாறு,

வாழைச்சேனை கல்லடி திருகோணமலை வீதி.தமையந்தி நியமிக்கப்படுள்ளார் தொ.இ.0774647296. மாவடி வேம்பு கல்லடி திருகோணமலை வீதி லோஜினி நியமிக்கப்பட்டுள்ளார் தொ.இ.0766048447.

நாவல்குடா கல்முனை வீதி கே.வேவி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ.0774132484. அக்கரைப்பற்று க.தங்கநேசம் நியமிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி இல 0767007318.

கோலாவில் சி.ராஜ்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 0754144408. பாண்டிருப்பு கல்முனை இந்திரா நியமிக்கப்பட்டுள்ளளார். தொ.இ.0779906344.

இவர்கள் மாபெரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் இணைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அமுலாக்கல் பணிப்பாளர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...