இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் சம்பந்தமாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சம்பந்தமாக இலங்கைக்குள் பரவியுள்ள பொய்யான பிரசாரம் மற்றும் இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்பு தொடர்பாக அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் பரவியுள்ள சீனாவின் ஹூபேய் பிராந்திய மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது தற்காலிகமாக நிறுத்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இலங்கைக்கு வர வேண்டுமாயின் குறைந்தது 14 நாட்கள் தனித்து தொற்று நீக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக சீனத் தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகளை சில நபர்கள் ஒதுக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இப்படியான நடவடிக்கைகளுக்கு செல்லாமல் அவர்களை வழமையான விதத்தில் கவனிக்குமாறும் சீனத் தூதரகம் இலங்கை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers

loading...