ஹெரோயினுடன் 38 வயதான சந்தேபநபரொருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சீனக்குடா பிரிவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இன்றைய தினம் செய்யயப்பட்டுள்ளார்.

நீரோட்டுமுனை, கரடிப்போர் பிரதேசத்தில் 3000 மில்லிகிராம் ஹெரோயினுடன் 38 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 13 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவருகிறது.

இவரை மேலதிக விசாரணைக்காக சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்டைக்கப்படைத்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...