இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்

Report Print Varunan in சமூகம்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காணமுடிகிறது.

எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இனம், மதம், மொழி, வேறுபாடுகளை கடந்து விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், தேசிய கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...