மரண தேசத்திலிருந்து மாணவர்களை காப்பாற்றிய இலங்கையர்களின் நெகிழ்ச்சியான செயல்

Report Print Vethu Vethu in சமூகம்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கையர்களை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்களின் செயல் நாட்டு மக்களால் பாராட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்கள், தங்கள் பயணத்திற்காக கிடைத்த கொடுப்பனவை கௌரவமான முறையில் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தங்கள் விமான பயணத்திற்கு கிடைத்த பணத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர்களுக்கு பயன்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் மற்றும் கை கவசங்கள் பெற்றுக் கொள்வதற்காக அந்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியுள்ள வுஹான் பகுதிக்கு சென்றிருந்த விமானிகள் தலைமையிலான குழுவினர் 33 மாணவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

வுஹான் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...