மட்டக்களப்பு - ஏறாவூரை மையமாக கொண்டு அரசாங்கத்தின் புதிய திட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக 200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை முதலீட்டு சபையினால் 17 சுதந்திர வர்த்தக வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் 1978ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

இதனை தவிர பியகம, கொக்கல போன்ற இடங்களிலும் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...