இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று!

Report Print Vethu Vethu in சமூகம்

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லேவெல கிராமத்தில் அதிசய நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு வரட்சி ஏற்பட்டாலும் நீர் வற்றிப்போகாத நீரூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே நீர் வரும் நீருற்று என தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான வரட்சியின் போதிலும், அடை மழையின் போதிலும், அந்த நீரூற்றின் நீர் மட்டம் ஒரே அளவில் காணப்படும்.

எனினும் அந்த நீர் பயன்படுத்தாமல் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் குடிநீரின்றி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த பகுதியில் பலர் நீர் இல்லாமையினால் மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகின்றனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அந்தப் பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.


you may like this..

Latest Offers

loading...