உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹேமசிறிக்கு பிணை

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை இன்று வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வு துறை முன்கூட்டியே இலங்கை புலனாய்வு துறைக்கு தகவல் வழங்கியிருந்தது.

எனினும் அதனை பொருட்படுத்தாமை காரணமாகவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே அதற்கு பொறுப்பு கூறும் வகையிலேயே ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...