திருமணமாகி 4 நாட்களில் விபத்தில் பெண்ணொருவர் பலி! ஊரே பெரும் சோகத்தில்

Report Print Steephen Steephen in சமூகம்

பிபிலை - மஹியங்கனை பிரதான வீதியில் ஹெபோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மஹியங்கனை, ரிதிமாலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான உமேஷி சசிந்தனா என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சாரதி பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டி சாரதி பயிற்சி பெற்ற யுவதி காயமடைந்த நிலையில், பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,பயிற்சி வழங்கிய நபர் படுகாயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி பதிவு திருமணம் செய்து நான்கு நாட்களேயான நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...