வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவரொருவர் உள்ளிட்ட மூவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் பயணித்த (7 வயது) பாடசாலை மாணவன் உள்ளிட்ட மூவரே விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அப்பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனத்தை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறம் நோக்கி செலுத்தியுள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக சென்று வீதியால் பயணித்து கொண்டிருந்த இரு துவிச்சக்கரவண்டிகளுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சேதமாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers

loading...