மத்திய முகாம் பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம் ஏ.விஜயசிங்க தலைமையில் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பு மரியாதையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்கள்,வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.