இலங்கையில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகம் - வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.

மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலதிக பரிசோதனைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், அங்கொட வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பெற்றார்.

அவர் முழுமையாக குணமடைந்துள்ள சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.