பாடசாலைகளில் ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்ற யோசனை

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பாடசாலைகளில் தாய்மொழியை கட்டாய பாடமாக அறிவித்து அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில வழியில் கற்பித்தலை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அமைச்சுக்களின் செயலாளர்களின் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு வோன்டர் ஹொட்டலில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க இதனை கூறியுள்ளார்.

சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையில் ஆங்கிலத்தில் மாத்திரம் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுதந்திரத்திற்கு பின்னர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் இனங்களுக்கு இடையில் பிரிவினை ஆரம்பமாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...