கொரோனா தொற்று பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மருத்துவத்துறை மாணவி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவை சேர்ந்த 23 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று தன்னை பரிசோதனை செய்யுமாறு கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக யாழ். வைத்தியசாலைக்கு அவரை அனுப்பியுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சீனாவில் மருத்துவத்துறையில் படித்த ஒரு மாணவி வவுனியாவிற்கு கடந்த மாதம் 28ஆம் திகதி வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.

குறித்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகாணத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கும் மாகாணம்.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து வந்தவர்களை மட்டும் நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தியத்தலாவைக்கு அனுப்பியிருந்தோம்.

ஏனைய மாகாணங்களில் இருந்து வந்தவர்களை அவர்களுக்கு எவ்வித குணம் குறிகளும் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியிருந்தது.

ஆனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். இந்த நிலையில் குறித்த மருத்துவதுறை மாணவிக்கு இரு நாட்களாக மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமன் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மாணவி வவுனியா வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று, தான் சீனாவில் இருந்து குறுகிய காலத்திற்குள் தான் இலங்கை வந்ததாகவும், தனக்கு தற்போது காய்ச்சல் மற்றும் தடிமன் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யுமாறும் கோரியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மாணவியை உடனடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியாசாலை காணப்படுவதாகவும், பலாலி விமான நிலையம் உட்பட வடமாகாணத்தில் எந்த இடத்தில் இருந்து வந்தாலும் யாழ். மாவட்டத்திற்கே அனுப்புமாறு கூறியிருக்கின்றோம் என கூறியுள்ளார்.

Latest Offers