வவுனியா வாகன விபத்தில் தாய் பலி: மகள் படுகாயம்

Report Print Steephen Steephen in சமூகம்

கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் நடந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மகள் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த 36 வயதான எஸ்.புஷ்பராணி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியின் சாரதி வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளார்.

அப்போது அதில் பயணித்த தாயும், மகளும் விபத்துக்கு உள்ளாகியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து சம்பந்தமாக கெப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers