குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும்! மகிந்த

Report Print Steephen Steephen in சமூகம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 அத்தியவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச செலவுகளை ஈடுசெய்வதற்கான குறை நிரப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 10 அத்தியவசிய பொருட்களை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழில் அமுலுக்கு கொண்டு வரப்படும்.

லங்கா சதோச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள், பெண் நடத்து வர்த்தக நிலையங்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கி செயற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரிசி, கோதுமை மா, சீனி, கட்டிடப் பொருட்கள் போன்ற துறைகளில் ஏகபோக வர்த்தக முறையை மாற்ற வேண்டும்.

சீனி, பால் மா, கோதுமை, டின் மீன், கருவாடு போன்ற அதிகளவில் அந்நிய செலாவணி செலவாகும் இறக்குமதி வர்த்தகத்திற்கு பதிலாக தேசிய உற்பத்திகளை அதிகாரித்து முழு உற்பத்தி பொருளாதாரமும் ஏற்றுமதி சந்தைகளை இலக்கு வைத்து, வர்த்தக கொள்கைகளை மாற்ற முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...