கண்டி தெல்தோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு

Report Print Sinan in சமூகம்

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72ம் சுதந்திரதின நிகழ்வு "பாதுகாப்பான தேசம், சுபீட்சமான நாடு" எனும் தொனிப் பொருளில்கீழ் கண்டி மாவட்டம், பாத்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் அமையப்பெற்றுள்ளதெல்தோட்டைப் பிரதேசத்தின் மஹ்பலுல் உலமா அறபுக்கல்லூரி வளாகத்தில் சுதந்திரதினத்தன்று இடம்பெற்றது.

மேற்படி நிகழ்ச்சியில் கலஹா பொலிஸ் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், அரபுக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் குறிப்பாக72 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் அதிதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றதுடன், மேற்படி நிகழ்வினை றம்ய லங்கா தெல்தோட்டைக் கிளை, அகில இலங்கைஜம்இய்யதுல் உலமா (தெல்தோட்டை) மற்றும் மஹ்பலுல் உலமா அறபுக்கல்லூரி ஆகியனஇணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.