கேரள கஞ்சா வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையில் கேரளகஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் சூரங்கல் பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.

கிண்ணியா, சூரங்கல் சலாமத் நகரைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ, 620 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கிண்ணியா பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers

loading...