மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நெல் அறுவடை விழா

Report Print Ashik in சமூகம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில் இன்று நெல் அறுவடை விழா (வயல் விழா) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டதுடன், குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள், பயணாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.