ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கையூட்டலாக பெற்ற பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்போது இரண்டு அல்லது மூன்று இலங்கையர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களின் வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை பரிசீலிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமக்கு சார்பாக நடந்துக்கொள்வதற்காக எயார்பஸ் நிறுவனம் வழங்கிய 2 மில்லியன் டொலர் கையூட்டலை பெற்றுக் கொண்ட சந்திரசேனவும், அவரது மனைவியும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குகளும் பரிசீலிக்கப்படுவதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Latest Offers

loading...