வவுனியா ஒருங்கிணைப்புக்குழு தலைவரினால் ஓரங்கட்டப்படும் ஊடகவியலாளர்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரினால் சில ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட தர்மபால செனவரத்தினவின் அலுவலகத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் சில நிகழ்வுகள் தொடர்பில் ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ஊடகவியலாளர்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...