விசுவமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - விசுவமடு ஏ-35 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து ஏ-35 வழியாக அதி வேகமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியே படுகாயமடைந்த நிலையில்,தரும்புரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...