கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு! 34800 பேர் பாதிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 803ஆக உயர்ந்துள்ளது.

ஹூபை மாகாணத்தில் மாத்திரம் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34800 ஆகும்.

2003ம் ஆண்டு சார்ஸ் தொற்று பரவியபோது 774 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் நேற்று மாத்திரம் இந்த தொற்றினால் 81 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் மாத்திரமின்றி பல நாடுகளிலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.