வெலே சுதா உட்பட மூன்று கைதிகள் மீண்டும் வெலிகடைக்கு

Report Print Steephen Steephen in சமூகம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலே சுதா, சூசை மற்றும் கௌதம் ஆகிய முக்கிய கைதிகள் மீண்டும் வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலே சுதா என்ற கம்பொல விதானலாகே சமந்த குமார சட்ட ஆலோசனைக்கு அமைய இன்று முதல் 14 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

வெலே சுதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எவ்வாறாயினும் இந்த மூன்று கைதிகள் உட்பட முக்கியமான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகள் சில மாதங்களுக்கு முன்னர் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

பொட்ட நவ்பர், கஞ்சிபானை இம்ரான், ஊரு ஜூவா மொஹமட் சியாம், பேக்கரி ஜானக்க உட்பட பாதாள உலக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 18 பேர் பூசா சிறைச்சாலையில் 16 சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...