வாழைச்சேனையில் வெளிமாவட்ட மணல் கடத்தல் நபர்கள் இருவர் கைது

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டு பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதுறுஓயா ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் மண் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.