சீ.ஐ.டி.விசாரணையின் அடிப்படையில் நடக்கும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

குற்றவியல் விசாரணை திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நடந்து வரும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சம்பந்தமாக சிக்கல் எழுந்துள்ளமை இந்த கோரிக்கைக்கு பிரதான காரணம் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

விசாரணை செயற்பாடுகளில் சிக்கல் இருப்பது நீதிமன்ற செயற்பாடுகள் தடையல்ல எனவும் அப்படியான சிக்கல் இருக்குமாயின் அது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு அறிவித்து, அது தொடர்பாக அவசியமான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சட்டத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் இந்த கோரிக்கை சிக்கலுக்குரியது எனவும் இது சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனம் நடந்து கொள்ளும் விதமல்ல எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers

loading...