காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபட்டார் பிரதமர் மகிந்த

Report Print Steephen Steephen in சமூகம்

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகருக்கு சென்றுள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை வரவேற்க விசேட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாரணாசி சென்ற பிரதமர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக்கொண்டார்.

புனித கங்கை நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிவாலயமான காசி விஸ்வநாதர் ஆலயம் முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாகும். அதேவேளை மகிந்த ராஜபக்ச இன்று மாலை சாராநாத் செல்ல உள்ளார்.

Latest Offers

loading...