யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் விசுவநாதன் காலமானார்

Report Print Banu in சமூகம்

யாழ்ப்பாணம் நகரசபையின் முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் இன்று அவுஸ்ரேலியாவின், சிட்னி நகரில் காலமாகியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக கடமையாற்றிய ராஜா விசுவநாதன், தமிழர்களுடைய உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்ததுடன் பல்வேறு சமூக சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...