மட்டக்களப்பில் வரலாற்றில் முதல் முறையாக பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக பல்கலைக்கழகம் தெரிவான 26 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முன்றலில் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே தடவையில் கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 26 மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தொழிநுட்ப மற்றும் கலைத்துறைகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களை வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் சந்தியில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதுடன், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளால் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.