மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தேசிய நிர்மாணிகள் சங்க விருது வழங்கும் நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வொன்று மன்னாரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடமாகாண கிளையின் 2019ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ், விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அரச திணைக்கள அதிகாரிகள், வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த வடமாகாண தேசிய நிர்மாணிகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த றேமன் குரூஸ் (டிலக்ஸ்), பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.