பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பான முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை பாதுகாக்கக் கூடிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிக்கும் முற்பகல் 11 மணிமுதல் 3.30 வரையான காலப்பகுதியில், மாணவர்களை திறந்த வெளியில், அதிக வியர்வை ஏற்படும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொப்பியை அணிவதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் குடையை பயன்படுத்துதல், தளர்வான ஆடையை அணிதல் உள்ளிட்ட சில நடைமுறைகளையும் சுகாதார அமைச்சு ஆலோசனையாக முன்வைத்துள்ளது.

பாடசாலை வளாகத்தில் போதுமான அளவு குடிநீர் வசதியை ஏற்படுத்துவதுடன், முதலுதவி குழுக்களை பயிற்றுவித்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய் நிலைமையுடன் இருக்கும் மாணவர், முழுமையாக குணமடையும் வரை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பெற்றோர்களுக்கு அறியப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சுக்கு, சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Latest Offers

loading...