யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ராக்கிங் கொடுத்த மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்ட மாணவன் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாணவின் வீட்டுக்கு சென்ற நான்கு பேர், வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஆனைக்கோட்டையிலுள்ள வீட்டில் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவனின் வீட்டுக்குள் நுழைந்த நால்வர், அவரை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பகிடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this video