தென்னிலங்கை அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த பெண் அரச ஊழியர்! குவியும் பாராட்டுக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கை அமைச்சரின் ஒருவரின் உத்தரவினை ஏற்று நடக்க முடியாது என மறுப்பு வெளியிட்ட பெண் அதிகாரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பினை அழித்து அனுமதியற்ற நிர்மாணப்புகளுக்கு இடம் வழங்க முடியாதென அரச அதிகாரியான தேவானி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தேவானி ஜயதிலக்க முன் மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது ஆதரவு வழங்கியவர்களுக்கு முன்னிலையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதித்து செயற்படும் நேர்மையான அதிகாரியான தேவானி ஜயதிலக்க கருத்து வெளியிடுகையில்,

அரச காணிகளை பல்வேறு மனித செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் ஒக்ஸிஜனிற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்து வெளியிட்ட முறையானது அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதென பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.