யாழ். பல்கலைக்கழக மாணவிகள் செய்த முறைப்பாடு! பொலிஸாரிடம் சிக்கிய நபர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

இதனையடுத்து சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நல்லூர் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருட்டுப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்தப் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மேற்கொண்ட விசாரணையின் போது, பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.