இலங்கை இளைஞர், யுவதிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்! வெளியேற்ற போராடிய பொலிஸார்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட தொழில் நியமனங்களை இந்த அரசாங்கம் இடை நிறுத்தியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் போராட்டம் ஒன்றை செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கலந்து கொண்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த வெளிநாட்டவர் இளைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்களுடன் இணைந்து போராடுவதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் வெளிநாட்டவரை அந்த இடத்தில் இருந்து அகற்ற முற்பட்டதுடன் அவருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அந்த வெளிநாட்டவர் உங்களது அதிகாரத்தை வைத்து என்னை வெளியேற்றப் பார்க்கிறீர்களா என பொலிஸாரைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அகன்று இளைஞர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார்.