நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

Report Print Theesan in சமூகம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து சென்ற விசேட அதிரடிப்படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட கஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers