அதிகாலையில் மக்களை அச்சப்பட வைத்த நில அதிர்வு! பிரதேச மக்கள் வெளியிட்ட தகவல்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இந்திய பெருங்கடலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினாால் இலங்கையின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மாத்தறை, ரத்தோட்டை பிரதேசத்தின் நிகலொய, மடக்கும்புர, பம்பரகிரி எல்ல, வெரழுகஸ் தென்ன அகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த அதிர்வு ஏற்பட்டு சில நொடிகள் பூமி அதிர்ந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மடகும்புர பிரதேசத்தை சேர்ந்த பண்டார,

“அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த போது விமானம் ஒன்று பறக்கும் சத்தம் கேட்டது. 5 நொடி வரை நிலம் அதிர்ந்தது. அதனை தொடர்ந்து அந்த சத்தம் இல்லாமல் போனது. இதற்கு முன்னர் குறித்த பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டமையினால் இந்த சத்தம் மண் சரிவாக இருக்கலாம் என எண்ணியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அச்சமடைந்த மக்கள் வளிமண்டல திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் இயக்குநர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேமா தெரிவி்ததுள்ளார்.

இலங்கைக்கு அப்பால் சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும் இலங்கைக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Latest Offers